Wednesday, December 13, 2017

மூன்றாம் பாலினமும் இராணுவப் படையில்

மூன்றாம் பாலினமும் இராணுவப் படையில் இணைந்து சேவையாற்றலாம் என்ற அறிவிப்பை அமெரிக்கா வருகின்ற 1 ஜனவரி 2018 முதல் நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கி உள்ளது. இது அமெரிக்க இராணுவத்தைப் பொறுத்த வரை மிக முக்கியமானதொரு முடிவு,
இங்கு ஜெர்மனியிலோ இது ஒரு பிரச்சனையாகப் பார்க்கப்படுவதில்லை. அதிலும் குறிப்பாக 2006ம் ஆண்டில் anti-discrimination சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் மூன்றாம் பாலினமா எனக் கேட்டு பணிக்குத் தேர்ந்தெடுப்பது வழக்கில் இல்லை. ஓரினக்காதலர்கள் அல்லது மூன்றாம் பாலினம் என்பது ஜெர்மானிய இராணுவத்தில் இணைவதற்குத் தடையாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முக்கியக் காரணம் தனி மனித விருப்பங்களை அவர்களைப் புண்படுத்துவதற்காகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்ற நோக்கமே.
ஜெர்மானிய நடைமுறையில் தனி மனித விருப்பங்கள் என்பவை தனி நபரின் அந்தரங்கம். அவற்றை வெளிப்படுத்தி அவமானப்படுத்தச் செய்யும் செயல்கள் என்பது சட்டப்படி தவறானது.

No comments:

Post a Comment