Monday, June 29, 2015

ஜெர்மனியில் சில சுவாரசியமான நிகழ்வுகள் - Pappochelys



240 மில்லின் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாகக் கருதப்படும் ஆமை குடும்பத்தின் தாத்தா வெர்ஷன் ஒன்றின் எச்சங்கள் ஜெர்மனியின் நூரன்பெர்க் நகரில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.  இது இன்று நாம் அறிந்த ஆமை இனத்தை விட மாறுபாடான உடலமைப்பைக்கொண்டதாக இருப்பினும் இது ஆமை வகையிலேயே அடங்குகின்றது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பாம்பு வகை என்பதை விட இவை பறவை இனத்தோடு நெருங்கிய வகையில் இருப்பதாகவே ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

இந்த புதிய ஸ்பீஷீசிற்கு பப்பாசெலீஸ் Pappochelys என்ற கிரேக்க பெயரை சூட்டியிருக்கின்றனர். இதற்கு கிரேக்க மொழியில் தாத்தா அல்லது ஆமை என்று பொருள் படும். இந்த விலங்கு நீர் நிறைந்த நிலத்தோடு இணைந்த பகுதியில் வாழ்ந்திருக்கும் என்று இந்த ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இந்த விலங்கு ஏற்கனவே சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட 220 மில்லியன் ஆண்டுகள் பழமையான ஒரு விலங்கையும், தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட 260மில்லியன் ஆண்டுகள் பழமையான விலங்கையும் ஒத்திருக்கின்றதாம். 

இந்க் கண்டுபிடிப்பும் இதன் வழி அறிய வரும் தகவல்களும் பறவைகளும், முதலைகளும், டைனோர்சுகளும் ஆமை இணத்தோடு உடல் கூறு வகையில் நெருங்கிய தொடர்பு கொண்டவை என்பதை உறுதி செய்கின்றன என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். 

ஸ்டுட்கார்ட் நேச்சுரல் ஹிஸ்ட்ரி அருங்காட்சியகத்தில். விரைவில் ஒரு நாள்  சென்று இவரை பார்த்து வர வேண்டும். :-))


சுபா

Thursday, June 25, 2015

ஜெர்மனியில் சில சுவாரசியமான நிகழ்வுகள் - எலிஸெப் மகாராணியார்

இங்கிலாந்தின் எலிஸெப் மகாராணியார் ஜெர்மனி வந்திருக்கின்றார். தன் கணவருடன் விடுமுறை..

காலையில் வானொலியில் கேட்கும் போது குறிப்பிடத்தக்க சில விசயங்களில் மக்கள் ஆர்வம் காட்டுவது வேடிக்கையாக இருந்தது. 



மகாராணியும் அவர் கணவர் பிலிப்ஸும் தங்கியிருப்பது பெர்லினின் புகழ்பெற்ற  Adlon தங்கும் விடுதியில். இந்த ஹோட்டல் 2ம் உலகப் போரில் மிகச் சேதமடைந்து பின்னர் மீண்டும் கட்டப்பட்டது. இந்த ஹோட்டலைப் பற்றியே ஒரு உள்ளூர் சினிமாவும் கூட வந்தது. நான் ஒரு முறை இங்கு சென்று காபியும் கேக்கும் சாப்பிட்டு விலையை பார்த்து அசந்து போனேன். சாதாரண உணவங்களை விட இங்கு 3 மடங்கு விலை உயர்வு.   
எத்தனை மணிக்கு மகாராணியும் அவர் கணவர் பிலிப்ஸும் காலை உணவு எடுக்கின்றார்கள்..என்ன சாப்பிடுகின்றார்கள்.. பல்கலைக்கழக நிகழ்வில் எப்படி அவர் முகம் இருந்தது... என்று உள்ளூர் மக்களுக்கு அவர் ஒரு சுவாரசியமான விசயமாக இப்போது அமைந்திருக்கின்றார்.

Queen is meeting the European Koenigin அதாவது இங்கிலாந்தின் எலிஸெப் மகாராணியார் ஐரோப்பாவின் அரசியான அங்கேலா மெர்க்கலை சந்தித்தார் என உள்ளூர் வானொலி செய்தி குறிப்பிட்டு மகிழ்கின்றது.

The most powerful woman on the planet met the most famous woman in the world when Chancellor Angela Merkel welcomed the Queen to Germany. http://www.telegraph.co.uk/news/uknews/queen-elizabeth-II/11695667/Queen-meets-Angela-Merkel-on-visit-to-Berlin.html
- The Telegraph.

​சுபா​

Wednesday, May 27, 2015

கோடையில் ஸ்டுட்கார்ட் - 2 கார்ல்ஸ்ரூஹ மக்கள் தினக் கொண்டாட்டம்

கார்ல்ஸ்ரூஹ (Karlsruhe) நகரம் நான் வசிக்கும் லியோன்பெர்க் பகுதியிலிருந்து ஏறக்குறை வடக்கு நோக்கி 45 கிமீ தூரத்தில் உள்ளது. சென்ற வாரம் எங்கள் உறவினரை பார்த்து விட்டு வரும் வழியில் இங்குள்ள ஒரு அரண்மனையை பார்த்து வரலாம் எனச் சென்றிருந்தோம்.



அரண்மனைக்கு பக்கத்தில் "பழங்கால மக்கள் திருவிழா" ஒன்று மிகப் பெரிய அளவில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அரண்மனையைப் பார்க்க வேண்டும் என நினைத்திருந்ததால் அந்தப் பழங்கால மக்கள் திருவிழாவிற்குச் செல்லவில்லை.

அதற்கு பதிலாக கார்ல்ஸ்ரூஹ நகராண்மைக் கழகம் ஏற்பாடு செய்திருந்த மக்கள் தினம் (Volksfest) நகரின் மையப் பகுதியில் அரண்மனைக்கு எதிர்புரத்தில் நிகழ்ந்து கொண்டிருந்தது. அரண்மனையைச் சுற்றிப் பார்த்து விட்டு இந்த மக்கள் தின விழாவில் கலந்து கொண்டோம்.

இந்த மக்கள் தின கொண்டாட்டம் என்பது அந்த நகரத்து சற்று பழமையான கலைகளை ஞாபகப்படுத்தும் வகையில் நிகழ்த்தப்படும் நிகழ்ச்சிகள். இவ்வகை நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் ஒரே வகையான ஜெர்மனியின் பாரம்பரிய உணவுகளான Bratwürst (sausages), Pommes (french fries), கால்ஸ்ரூஹ நகரத்திற்கே சிறப்பான பியர் அதோடு கோடையில் மக்கள் விரும்பும் ஐஸ்க்ரீம், வேறு சில தின்பண்டங்களும் விற்பனைக்கு இருந்தன.

முக்கியமாக எல்லா கொண்டாட்டங்களிலும் இசை நிகழ்ச்சிகள் நடப்பது உறுதி. நாங்கள் சென்ற சமயத்தில் கால்ஸ்ரூஹ பாரம்பரிய இசைக்குழுவினர் (musikkapelle) இசை நிகழ்ச்சியை நிகழ்த்திக் கொண்டிருந்தனர்.



இந்த நிகழ்ச்சியைப் பார்க்க வந்திந்ருந்த பொது மக்கள் சாதாரண உடைகளோடு ஒரு சிலர் 19ம் நூற்றாண்டு, 20 நூற்றாண்டு ஆரம்ப கால உடைகளை ஞாபகம் கூறும் வகையில் உடையணிந்தும் வந்திருந்தனர். இவ்வகை நிகழ்ச்சிகளில்தான் இந்த பழமையான ஆடைகளைக் கிராமிய ஆடைகளைக் காண முடியும்.


(நின்று கொண்டிருக்கும் பெண்கள் கிராமிய உடை அணிந்திருக்கின்றார்கள்)


மேலே படத்தில் உள்ள அரண்மணை 1749-81ல் கட்டப்பட்டது. ஜெர்மனியில் உள்ள மிகப் புதிய நகரங்களில் கார்ல்ஸ்ரூஹவும் ஒன்று. இந்த நகரம் 1915 வாக்கில் உருவானது. அரசர் கார்ல் வில்ஹெல்ம் அவர்களது விருப்பத்தின் பேரில் இந்த அரண்மனை உருவாக்கப்பட்டது. அரண்மனைக்கு சற்று தள்ளி கார்ல்ஸ்ரூஹ நகர மையத்தில் அரசரின்´உடல் தகனம் செய்யபப்ட்டு ஒரு பிரமிட் வடிவிலான நினைவு மண்டபமும் வைக்கப்பட்டுள்ளது.



இந்தப் பகுதியில் உள்ள வீடியோ கிளிப் ஒன்றினைப் பாருங்கள்.



குழந்தைகளைக் கவரும் இனிமையான இசையையும் அதனை இசைக்கும் கலைஞரையும் இங்கு காணலாம்.

அன்புடன்
சுபா