Sunday, December 17, 2017

கிறிஸ்மஸ் மரங்கள்

Subashini Thf added 3 new photos.
1 hrLeonberg
இங்கு ஜெர்மனியில் கிறிஸ்மஸ் பண்டிகையை மக்கள் வீட்டில் கொண்டாட கிறிஸ்மஸ் மரங்கள் தேவைப்படுகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு எல்லா கிராமங்களிலும் கிறிஸ்மஸ் மரங்களை விற்பனைக்கு வைத்துள்ளனர். இந்த மரங்களை வாங்கிச் சென்று வீட்டில் 24ம் தேதி மதியம் தொடங்கி அலங்கரிப்பார்கள். மாலையில் அலங்காரம் முடிந்து விடும். பரிசுப் பொருட்களை மரத்தின் கீழே வைத்து மாலையில் அனைவரும் பரிசுகளைத் திறந்து பார்த்து மகிழ்வார்கள். கிறிஸ்மஸ் பண்டிகைக்கென்றே இவ்வகை மரங்கள் வளர்க்கப்படுகின்றன. ஒரு சாதாரண மரத்தின் விலை 30லிருந்து 80 யூரோ வரை இருக்கும். பெரிய மரங்கள் இன்னும் கூடுதலான விலையில் விற்கப்படுகின்றன.



கிறிஸ்மஸ் பண்டிகை விழா - அலுவலகத்தில்

கிறிஸ்மஸ் பண்டிகை விழா இங்கே களை கட்ட ஆரம்பித்து விட்டது. இன்று அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும்
அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்மஸ் மரத்துடன்...




Saturday, December 16, 2017

3வது அட்வெண்ட்

நாளை 3வது அட்வெண்ட்.
எங்கள் வீட்டு கிறிஸ்மஸ் அலங்காரத்துடன் பண்டிகை வரவேற்பு தொடங்கியது.


Wednesday, December 13, 2017

மூன்றாம் பாலினமும் இராணுவப் படையில்

மூன்றாம் பாலினமும் இராணுவப் படையில் இணைந்து சேவையாற்றலாம் என்ற அறிவிப்பை அமெரிக்கா வருகின்ற 1 ஜனவரி 2018 முதல் நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கி உள்ளது. இது அமெரிக்க இராணுவத்தைப் பொறுத்த வரை மிக முக்கியமானதொரு முடிவு,
இங்கு ஜெர்மனியிலோ இது ஒரு பிரச்சனையாகப் பார்க்கப்படுவதில்லை. அதிலும் குறிப்பாக 2006ம் ஆண்டில் anti-discrimination சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் மூன்றாம் பாலினமா எனக் கேட்டு பணிக்குத் தேர்ந்தெடுப்பது வழக்கில் இல்லை. ஓரினக்காதலர்கள் அல்லது மூன்றாம் பாலினம் என்பது ஜெர்மானிய இராணுவத்தில் இணைவதற்குத் தடையாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முக்கியக் காரணம் தனி மனித விருப்பங்களை அவர்களைப் புண்படுத்துவதற்காகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்ற நோக்கமே.
ஜெர்மானிய நடைமுறையில் தனி மனித விருப்பங்கள் என்பவை தனி நபரின் அந்தரங்கம். அவற்றை வெளிப்படுத்தி அவமானப்படுத்தச் செய்யும் செயல்கள் என்பது சட்டப்படி தவறானது.

பாலஸ்தீனம் கிழக்கு ஜெரூசலத்தை பாலஸ்தீனத்தின் தலைநகராக அறிவித்துள்ளது

மத்திய கிழக்கில் குழப்பம் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற அமெரிக்க சிந்தனை மீண்டும் வெற்றி பெற்றிருக்கின்றது.
ட்ரம்பின் ஜெரூசலம் தொடர்பான அறிவிப்பை அடுத்து பாலஸ்தீனம் கிழக்கு ஜெரூசலத்தை பாலஸ்தீனத்தின் தலைநகராக அறிவித்துள்ளது. 57 இஸ்லாமிய நாடுகளை உறுப்பினராகக் கொண்ட Organization of Islamic Cooperation (OIC) இன்று கிழக்கு ஜெரூசலத்தை பாலஸ்தீனத்தின் தலைநகராக அறிவித்ததுடன் மத்திய கிழக்கின் அமைதி பேச்சு வார்த்தை முயற்சிகளிலிருந்து அமெரிக்காவை வெளியேறச் சொல்லி அறிக்கை வெளியிட்டுள்ளன. அதே வேளையில் ட்ரம்பின் அறிவிப்பை செல்லாது என்றும் இந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளன. இந்த அவசரக் கூட்டம் துருக்கியில் அதன் அதிபர் எர்டோகானால் ஏற்பாடு செய்யப்பட்டு முடிந்துள்ளது.
இந்த நிகழ்வுகளெல்லாம் விரைவில் மத்திய கிழக்கில் போர் ஏற்படக் கூடிய சாத்தியங்களை முன் வைக்கின்றன.
அமெரிக்காவின் ஆயுத விற்பனைக்கு பலியாகும் மத்திய கிழக்காசிய நாடுகள் இதனையும் சற்று சீர் தூக்கிப் பார்க்கலாம்.
-சுபா