Saturday, February 18, 2012

ஜெர்மனியில் சில சுவாரசியமான நிகழ்வுகள்

இந்த வாரம் இங்கே மக்கள் பேசிக் கொள்ள சில முக்கிய விஷயங்கள் தொடர்ந்து நடந்துள்ளன. நமக்கும் பேச விஷயம் தேவைப்படுகிறது.. .அவ்வப்போது எதிர்பார்ப்பை அதிகரிக்கும் சில விஷயங்கள் நடந்தால் தேனே பொழுதும் சுவாரஸ்யமாகக் கழிகின்றது.. இல்லையா..


ஜெர்மன் அதிபரின் பதவி விலகல்

நேற்று காலை திடீரென்று ஜெர்மனியின் அதிபர் தாம் பதவி விலகுவதாக அறிவித்தார். கிறிஸ்டியான் உல்வ்.. ஆளும் ஆங்கேலா மேர்க்கலின் சிடியு கட்சியின் ஆதரவில் தேர்ந்தெடுக்கப்பட்டவர். சாமர்த்தியமான, இளமையான, நல்ல பேச்சுத் திறமை உள்ள, அரசியல் அனுபவமும் உள்ளவர், ஒன்றரை வருட காலம் அதிபராகப் பதவி வகித்தவர். ஜெர்மனியில் ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த முதல் அதிபர் என்பதும் இவருக்குள்ள தனிச்சிறப்பு. சட்டம் படித்த பட்டதாரி. 1975 முதல் அரசியலில் இருந்து வருபவர்.

இவ்வளவு அனுபவம் உள்ள ஒரு அதிபர் எதனால் பதவி விலக வேண்டும்.. அவரது தனிப்பட்ட சில நடவடிக்கைகள் தான் காரணமாக இருக்கின்றன.. இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கிய ஒரு வீட்டிற்கு ஏதோ ஒரு வகையில் வந்த பணம் தான் முதல் பிரச்சனைக்குக் காரணமாக ஆனது. தொடர்ந்து இவரது விடுமுறை பயணங்களில் இவர் தேர்ந்தெடுக்கும் விலையுயர்ந்த உல்லாசச் செலவுகள்.. இப்படி கடந்த 2 மாதமாக உள்ளூர் பத்திரிக்கைகள் செய்தியாளர்கள் இவரது புனிதத்தை கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டு இவரை தூங்க விடாமல் செய்து நேற்று காலை அவரே பதவி விலகுவதாகச் சொல்லி விலகிவிட்டார். இப்போது சேன்ஸலர் மேலும் ஒரு தகுதி வாய்ந்த அதிபரை முன் மொழிய வேண்டிய நிலை உள்ளது. இப்போது இது இங்கே ஒடு ஹாட் நியூஸ்.யூரோ விஷன் பாடல் போட்டி

யூரோ விஷன் ஐரோப்பா முழுமைக்கும் இசைக் கலைனர்களை கட்டிப் போட்டு வைத்திருக்கும் ஒரு பாடல் போட்டி நிகழ்ச்சி. 1956லிருந்து ஒவ்வொரு வருடமும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தப்போட்டிகளில் ஐரோப்பிய கண்டத்தின் பல நாடுகள் ஒவ்வொரு வருடமும் போட்டியில் கலந்து கொள்ளும். 2010ல் ஜெர்மனியின் லேனா செட்டலைட் என்னும் மனம் மயங்க வைக்கும் பாடலை வழங்கி ஜெர்மனிக்கு முதல் பரிசை வாங்கிக் கொடுத்ததால் சென்ற ஆண்டு போட்டி இங்கே நடைபெற்றது. அந்தப் போட்டியில் வென்ற அஸீர்பைஜான் இந்த ஆண்டு போட்டியை நடத்தும் நாடு. அதற்கு ஹெர்மனியிலிருந்து செல்லவிருக்கும் பாடகரையும் பாடலையும் தேர்ந்தெடுக்கும் போட்டி நிகழ்வுகள் கடந்த ஐந்தாறு வாரங்களாக நடந்து கடந்த வியாழனன்று போட்டியாளர் ரோமன் தேர்ந்தெடுக்கப்பட்டார். Standing Still என்ற தலைப்பிலான் பாடல்.. மிக நனறாக வந்திருக்கின்றது. போட்டியில் வெற்றி பெறத் தகுதியான பாடலா என்பது தெரியவில்லை. ஆனாலும் ரோமானின் பாடும் அழகும் குரலும் பாடல் வரிகளும் பார்ப்பவர்கள் மனதை இப்போது கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றது.இந்த 21 வயது இளைஞர்.. மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படிப்பவர்.. இங்கே பல இளம் பெண்களின் ஆண்களின் கனவு ராஜாவாக நிச்சயம் அடுத்த சில மாதங்களுக்கு ரோமான் உலா வருவார் என்பது நிச்சயம். http://www.thelocal.de/society/20120217-40805.html

2010ம் ஆண்டு லேனாவின் வெற்றி பெற்ற பாடல் யூடியூபில் இங்கே http://www.youtube.com/watch?v=UmOeISUYXuI

கார்னிவல்கொல்ன்.. கலாச்சார மையம் என அழைக்கப்படும் இந்த நகரில் இந்த ஆண்டும் கோலாகலமாக கார்னிவல் ஆரம்பித்து விட்டது. வியாழக்கிழமை மாலையே பலர் அலுவலகத்தில் விடுமுறை சொல்லி விட்டு சென்று விட்டார்கள். பலர் செவ்வாய் கிழமை வரை கார்னிவல் மகிழ்ச்சியிலேயே திளைத்திருப்பர்.

நாளை மாலை அருகில் இருக்கும் ஒரு நகரத்தில் நீண்ட அணிவகுப்பு நடைபெற இருக்கின்றது. நானும் சென்று வர எண்ணியிருக்கின்றேன். மிகப் பிரமாதமான ஒரு அணிவகுப்பு அது . நிச்சயமாகப் படங்களையும் பகிர்ந்து கொள்கிறேன்.

கார்னிவல் இங்கே எப்படி கொண்டாடப்படுகின்றது என்று தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்களுக்கு இங்கே http://www.journeymart.com/holidays-ideas/festivals/cologne-carnival-germany.aspx சில செய்திகள் உள்ளன.

சுபா

No comments:

Post a Comment