கோடை காலம் ஸ்டுட்கார்ட் நகருக்குத் தனி பொலிவை எப்போதும் கொண்டு வந்து விடும். பார்க்கு மிடமெங்கினும் மலர்கள்.. வர்ண வர்ன ஆடைகளில் மக்கள்.. ஆங்காங்கே கலை நிகழ்ச்சிகள். இப்படி மனம் கவரும் அம்சங்கள் ஸ்டுட்கார்ட் நகரில் கோடை காலச் சிறப்பாக அமைந்து விடும்.
ஸ்டுட்கார்ட் அருகாமையில் உள்ள கிராமங்கள் ஏராளம். ஒவ்வொன்றிலும் வார இறுதி நாட்களில் சாலை திருவிழாக்கள் நடைபெறும். இவை அனைத்தையும் விட மிகச் சிறப்பாக அமைவது ஸ்டுட்கார்ட் கோடை விழா. கடந்த 4 நாட்களாக ஸ்டுட்கார்ட் அரச மாளிகை உள்ள பகுதியில் திருவிழா சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
நேற்று மாலை நான் இத்திருவிழாவைப் பார்க்கச் சென்றிருந்தேன். சில புகைப்படங்கள்.
ஜெர்மானியர்கள் கோடையின் ஒவ்வொரு துளியையும் கோண்டாகிறார்கள் போல... படங்கள் அனைத்தும் அருமை...
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஅங்கு இப்போது உள்ள நிலை பற்றி மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் படங்கள் மிக அழகு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-