Wednesday, July 9, 2014

2014 உலகக் காற்பந்து போட்டி

​​ .. Ein historischer Sieg..!
.......Ein historisher Rekord..!

இங்கு நேற்று இரவு போட்டி முடிந்ததிலிருந்து இந்த வார்த்தைகளைதான் அதிகம் கேட்டுக் கொண்டிருக்கின்றேன்.

7-1 என்ற கோல் கணக்கில் பிரேசிலை தோற்கடித்து இவ்வாண்டு உலக காற்பந்து போட்டியில் ஒரு சாதனையை ஜெர்மனி செய்து இறுதிச் சுற்றுக்குச் செல்கின்றது.

நினைத்துப் பார்க்கவே இல்லை.

11ம் நிமிடத்தில் தோமஸ் மூல்லரின் முதல் கோல்.. அதன் பின்னர் மீரஸ்லாவ் க்லோஸாவின் 2வது கோல் அடுத்த 9 நிமிடங்களில்.. அடுத்த 3 நிமிடத்தில்  டோனி க்ரூஸின் 3ம் கோல் அடுத்த  2ம் நிமிடத்தில் க்ரூஸின் அடுத்த கோல்.. அடுத்த 7ம் நிமிடத்தில் கடீராவின் கோல் என அடுத்தடுத்து கோல் போட்டு பிரேசிலின் அணியை நிலை தடுமாற வைத்து விட்டது ஜெர்மனி அணி.  முதல் 45 நிமிடத்திலேயே 5  கோல்கள்.

2ம் பகுதி பிரேசிலின் கடுமையான எதிர்ப்புடன் தொடங்கினாலும் மீண்டும் ஷூலரின் ஒரு கோலும் மூல்லரின் 2ம் கோலும் ஜெர்மனியை வெற்றிப்பாதையிலேயே வைத்திருந்தது. 

16 முறை பிரேசிலின் அணி கோல் போட முயன்றும் அனைத்தையும் லாவகமாக தடுத்து தனது திறமையை மீண்டும் நிரூபித்து விட்டார் ஜெர்மனியில் கோல் கீப்பர் மானுவேல் நோயர். ஆயினும் இறுதியில் பிரேசில் ஒரு கோல் போட்டு உள்ளூர் மக்களின் அழுகைக்கு ஒரு ஆறுதலை தேடித்தந்தது என்று சொல்லலாம்.

ஆக ஒரு வழியாக இறுதிச் சுற்றுக்கு வந்து விட்டது ஜெர்மனி.. இங்கே மகிழ்ச்சி எல்லா இடங்களிலும்..  வரும் ஞாயிற்றுக் கிழமை இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.. 

ஜெர்மனி மோதப் போவது நெதர்லாந்தா அல்லது அர்ஜெண்டீனாவா என்பது இன்று தெரிந்து விடும்..

சில படங்கள்


ஜெர்மன் அணி


Inline image 8
மூல்லர்

Inline image 2
க்ரூஸ்


Inline image 3
க்ளோஸ



Inline image 5
ஷூலர் + க்ளோஸ


Inline image 7
நோயர்



Inline image 6
பொது மக்கள்.. மகிழ்ச்சியில்..

1 comment:

  1. Herzlichen glückwunch Deutschland.
    முதல் 45 நிமிடங்களும் செம விறுவிறுப்பான ஆட்டம். சூப்ப்ப்பர் மாட்ச்.

    ReplyDelete