தமிழகப் பயணத்தில் இருந்தமையால் உலகக் காற்பந்து போட்டி விளையாட்டுக்களைக் காண முடியாத சூழலில் இருந்தேன்.
தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலகக் காற்பந்து போட்டியில் இன்று அமெரிக்காவுடன் ஜெர்மனியின் குழு மோதுகின்றது.
அமெரிக்க குழுவின் பயிற்சியாளர் யூர்கன் க்ளீன்ஸ்மான் ஜெர்மனி குழுவின் பயிற்சியாளராக 2002 லிருந்து 2008 வரை இருந்தவர். அவருக்குப் பின்னர் அவரது உதவியாளர் யோகி லூ ஜெர்மனி குழுவுக்குப் பயிற்சியாளராகத் தொடர்கின்றார்.
ஆக இன்றைய போட்டி அமெரிக்க vs. ஜெர்மனி என்பதை விட க்ளின்ஸ்மான் vs. லூ என்று இங்கு காணப்படுகின்றது.
No comments:
Post a Comment