கோடை காலம் முடிந்து இப்போது ஜெர்மனியில் இலையுதிர் காலம் தொடங்கி விட்டது. தற்சமயம் வாரத்தில் மூன்று நாட்களாவது மழை. சீதோஷ்ணம் 15 டிகிரி என்ற வகையில் குறைந்து விட்டது. குளிர் காலத்தை நோக்கிச் செல்லும் அறிகுறிகள் தென்பட ஆரம்பித்து விட்டன. மதியம் அதிக பட்சம் சில நாட்கள் 19 டிகிரி ஆனால் மாலையில் 5 டிகிரி வரை செல்லும் நிலைமைதான் தற்சமயம். இலையுதிர் காலத்தில் கோடை திருவிழா பற்றி சொல்வது பொருந்தது. இருப்பினும் கோடையில் நான் சென்று வந்த மேலும் 2 திருவிழாக்களைப் பற்றிய செய்திகளைப் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.
ஆகஸ்டு முதல் வாரத்தில் சில நாட்கள் விடுமுறையிலிருந்த சமையம் நான் சில நாட்கள் அருகாமையில் உள்ள நகரங்களுக்கு சைக்கிள் பயணம் மேற்கொண்டேன். பக்கத்திலேயே உள்ள கிராமங்களை அறிந்து கொள்ளவும் இயற்கை அழகை ரசிக்கவும் சைக்கிள் பயணம் நல்ல வழி. அந்த வகையில் நான் இருக்கும் நகரமான லியோன்பெர்க் நகரில் புராதனமான Mühlen Weg என்று சொல்லப்படக்கூடிய தானியங்கள் அரைக்கும் ஆலைகளைச் சுற்றி பயணம் சென்று வர திட்டமிட்டேன். இந்த தானியங்கள் அரைக்கும் ஆலை சுற்றி சைக்கிள் பயணம் என்பது Glems ஆறு செல்லும் பாதையை ஒட்டி அமைந்திருக்கும் ஒரு சைக்கிள் பயணம். இது லியோன்பெர்க் நகரத்திற்குச் சிறப்புச் சேர்க்கும் ஒன்றும் கூட. இந்த ஆலைகளில் பெரும்பாலானவை 12ம் 13ம் நூற்றாண்டிலிருந்து சேவையில் இருப்பவை.
இந்தப் பயணத்தை முழுமையாக முடிக்க அதன் பாதையில் உள்ள 19 ஆலைகளையும் ஒவ்வொன்றாகக் கடந்து செல்ல வேண்டும். 47 கிமீ தூரம் சைக்கிள் பயணம் இது. முதல் ஆலை இருப்பது எனது இல்லத்திற்கு மிக அருகில். க்லெம்ஸ் நதி ஓடும் பகுதியில் தான் எனது இல்லமும் இருப்பதால் முதல் தானியம் அரைக்கும் ஆலையிலிருந்தே பயணத்தைத் துவக்கினோம். இணையத்தில் கிடைக்கும் வரைபடத்தைத் தயார் செய்து கொண்டு புறப்பட்டோம். ஆறு ஆலைகளைக் கடந்த பின்னர் ஏழாவது ஆலையை விட்டு செல்லும் போது வேறு பாதையை நாங்கள் எடுத்து விட்டதால் டிட்ஸிங்கன் கிராமத்தின் மையப்பகுதிக்கு வந்து விட்டோம். வரும் வழியில் டிட்ஸிங்கன் சோளக்காட்டில் திருவிழா என்ற செய்தியைப் பார்த்து சைக்கிளை அங்கே செலுத்தினேன்.
சோளக்காட்டிற்கு முன்னர் கூடாரங்கள் அமைத்து உணவு விற்பனை செய்யப்பட்டுக்கொண்டிருந்தது. பக்கத்தில் சிறிய கூடாரம். மாலையில் கலை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடாகியிருந்தது. குழந்தைகள் விளையாடுவதற்காக சருகுக் கட்டுக்களைப் போட்டு வைத்திருந்தார்கள். குழந்தைகள் அங்குமிங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருந்தனர். டிட்ஸிங்கன் மக்களுக்கு அன்றைய மதிய/மாலை பொழுதுக்கு ஒரு நல்ல நிகழ்ச்சியாக அது அமைந்திருந்தது.
ஒரு காபியும் கேக்கும் வாங்கிச் சாப்பிட்டு விட்டு 3 யூரோ கட்டணம் செலுத்தி நுழைவுச் சீட்டைப் பெற்றுக் கொண்டு சோளக்காட்டின் லேபிரிந்திற்குள் சென்றோம். லேபிரிந்தைத் திட்டமிட்டு அமைத்திருந்தனர். உள்ளே நுழையும் போது லேபிரிந்தில் தேடி விடை கண்டுபிடிக்க வேண்டியதற்காக 4 கேள்விகள் அடங்கிய ஒரு கேள்வித்தாளை தந்திருந்தனர்.
இந்த ஆண்டின் லேபிரிந்தின் வடிவமைப்பு மீன், கடல் வாழ் உயிரினங்கள் என்ற வகையில் அமைக்கப்ட்டிருந்தது. அதை இப்படத்தில் காணலாம்.
சோளக்காட்டின் இடையே நல்ல வழி அமைத்திருந்தனர். உள்ளே நுழையும் போது மாட்டிக் கொள்வோம் என்று நினைக்கவில்லை. ஆனால் சற்று நேரத்தில் எங்கே இருக்கின்றோம் எனத் தெரியாமல் அங்குமிங்கும் சுற்ற ஆரம்பித்து விட்டேன். எப்படியோ சுற்றித் திரிந்து ஒரு வழியாக 3 கேள்விகளுக்கு விடையைக் கண்டுபிடித்து எழுதிக் கொண்டேன். அங்கேயும் சிலர் ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டு அடுத்து செல்வதற்கான வழியைப் பற்றிய செய்தியையும் பரிமாறிக்கொண்டனர். ஒரு அப்பா தனது மகளைக் காணாது தேடிக் கொண்டிருந்தார். சிலர் அங்குமிங்கும் நடந்து விடுபட்டுப்போன குடும்ப உறுப்பினர்களைத் தேடித்திரிந்து கொண்டிருந்தனர்.
சுற்றி சுற்றி வந்து நான்காவது கேள்விக்கான விடையையும் கண்டு பிடித்து விட்டோம். அதற்குப் பின்னர் வெளியே வந்தால் போதும் என்ற நிலையில் பாதையைத் தேடி கண்டுபிடித்து வெளியே வந்தேன். ஆகஸ்டு மாதமாதலால் சோளம் காய்த்து அறுவடைக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் சமையம் அது. ஆக சோளத்தைத் தாங்கி நிற்கும் செடிகளுக்கிடையே நடந்து செல்வது மிக மிக ரம்மியமாக இருந்தது. சோளச் செடியின் பூ சாமரம் வடிவில் பஞ்சு போன்ற மெல்லிய சிறு பூக்களாகக் காட்சியளித்தது.
இயற்கையின் அழகுக்கு ஈடு ஏது?
நீண்ட தூர சைக்கிள் பயணத்தை திட்டமிட்டு சென்றதால் கேமராவை கையோடு எடுத்துச் செல்லவில்லை. அதனால் இணையத்தில் கிடைத்த படங்களையே இணைத்திருக்கின்றேன். வருடா வருடம் நடக்கும் ஒரு திருவிழா இது என்பதால் இணையத்தில் பல செய்திகளும் படங்களும் பலர் சேர்த்திருக்கின்றனர். அவர்கள் புண்ணியத்தில் சில படங்களை இங்கு இணைத்திருக்கின்றேன்.:-)
இது கடந்த ஆண்டு லேபிரிந்தின் வடிவம்.
டிட்ஸிங்கனில் சோளக்காட்டில் மாட்டிக்கொண்டதில் சைக்கிள் பயணம் தடைபட்டு விட்ட வருத்தம் இருந்ததால் இரண்டு நாட்களுக்குப் பின்னர் அந்த பயணத்தை மேற்கொண்டேன். இம்முறை முழுமையாக 19 புராதன தானிய ஆலைகளையும் பார்த்து க்லெம்ஸ் நதிக்கரையின் குளிர்ச்சியை ரசித்து ஏறக்குறைய 60 கிமீ சைக்கிள் பயணத்தை மேற்கொண்டு வந்தோம். அதனைப் புகைப்படங்களோடு வெளியிட்டு எழுத விருப்பம் உள்ளது. நேரம் கிடைக்கும் போது அந்தக் கட்டுரையைப் பகிர்ந்து கொள்கிறேன்.
அன்புடன்
சுபா

இடத்தின் தகவல்கள் கொடுக்க முடியுமா? கெர்லிங்கனிலிருந்து பக்கம் என்பதால் எனக்கு போய்வர வசதியாக இருக்கும்.
ReplyDelete