ஜெர்மனியின் தெற்கு மாநிலமான பவேரியாவின் தலைநகரான மூன்சன் நகரம் ஜெர்மனியின் பொருள்வளமிக்க ஒரு நகரம். இங்கு ஏராளமான உலகளாவிய தொழிற்கூடங்களும் ஆயுவு நிலையங்களும் இருக்கின்றன. இலங்கையிலிருந்தும் தமிழகத்திலிருந்தும் வந்த தமிழ் மக்கள் இங்கு கணிசமான எண்ணிக்கையில் இருக்கின்றனர். இங்கு சில வார இறுதி தமிழ்ப்பள்ளிக்கூடங்களும் இயங்கி வருகின்றன.
மூன்சென் தமிழ்ப்பள்ளி (ஜெர்மனி) மாணவர்களைக் கடந்த சனிக்கிழமை சந்தித்து அவர்களுடன் உரையாடியது மகிழ்ச்சியளிக்கின்றது. 31 மாணவர்கள் இந்தத் தமிழ்ப்பள்ளியில் பயில்கின்றனர். எனது கீழடி-வைகை நாகரிகம் நூலை அவர்களுக்கு அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியை இந்தப் பள்ளியின் அமைப்பாளர் தம்பி சத்தியமூர்த்தியும் ஏனைய ஆசிரியர்களும் ஏற்பாடு செய்திருந்தனர். குழந்தைகள் பாவாடை சட்டை, வேட்டி எனத் தமிழ் பண்பாட்டு உடைகளுடன் வந்திருந்தனர். அழகான காட்சியாக இது இருந்தது.
நூல் அறிமுகத்துக்குப் பின்னர் மாணவர்கள் ஒவ்வொருவரும் என்னிடம் வந்து நூலை எனது கையெழுத்துடன் பெற்றுக் கொண்டு சென்றனர். அதன் பின்னர் அவர்களாகவே சுயமாகச் சிந்தித்து என்னிடம் சில கேள்விகளையும் எழுப்பினர். பெற்றோர்கள் சொல்லிக் கொடுத்து கேட்காமல் அவர்களே சுயமாக எழுப்பியக் கேள்விகள். தமிழ் மொழியிலேயே மாணவர்கள் உரையாடினர் என்பது கூடுதல் மகிழ்ச்சி.
குறிப்பு : குழந்தைகளின் முகத்துடனான புகைப்படங்களைப் பொது வெளியில் பகிரக்கூடாது என்ற சட்டம் இருப்பதால் முழுமையான புகைப்படங்களை இங்கு நான் பகிரவில்லை.
நூலைப் பெற விரும்புவோர் பயில் பதிப்பகத்தைத் தொடர்பு கொள்ளலாம். அல்லது கீழ்க்காணும் பக்கத்திலும் ஆர்டர் செய்து பெறலாம். https://www. commonfolks.in/.../d/keezhadi- vaigai-naagarigam
-சுபா
No comments:
Post a Comment