Georg Floyd - ஜோர்ஜ் ப்ளோய்டின் மரணம் ஐரோப்பிய நாடுகளில் ஏற்படுத்திக்
கொண்டிருக்கும் இனவாதத்திற்கு எதிரான எழுச்சியும் அதனை அவர்கள்
வெளிப்படுத்தும் விதமும் உலக மக்கள் யோசிக்க வேண்டிய ஒரு முக்கியச் செய்தி
என்று நான் நினைக்கின்றேன்.
நேற்று முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்தின் ப்ரிஸ்டல் நகரில் அந்த நகருக்கு கடந்த சில தினங்கள் வரை முக்கியஸ்தராகக் கருதப்பட்ட Edward Colston சிலை தகர்த்தெரிந்து ஆற்றில் வீசப்பட்டது.
யார் இவர்?
1680ல் Royal African Company (RAC) என்ற நிறுவனத்தை உறுவாக்கி ஆப்பிரிக்காவிலிருந்து மக்களை வேற்று நாடுகளுக்குக் கொண்டு செல்லும் அடிமைத்தொழிலை மிகத் தீவிரமாகச் செய்தவர். ஏறக்குறைய 100,000 மேற்கு ஆப்பிரிக்க மக்கள் இவரால் கரீபியத் தீவுகளுக்கும் அமெரிக்காவிற்கும் அடிமைகளாக விற்கப்பட்டனர். அடிமை வாழ்க்கையின் கொடூரம் வார்த்தைகளால் எழுத முடியாது.

இன்று இந்த மனிதரின் உருவச் சிலை ப்ரிஸ்டல் நகருக்கு பெருமையல்ல என
பொதுமக்களே நினைத்து உடைத்து எரிந்து விட்டார்கள். உடைத்ததும், வீசியதும்
சரியா தவறா என்பது இன்று ஒரு கேள்வியல்ல. மாறாக மக்கள் மனதிலிருந்து
அடிமைத்தனத்தை வித்திட்டவர்கள் அகற்றப்படுவார்கள் என்பது இனவாதம்
பேசுபவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.
இந்திய மற்றும் தமிழ்ச்சிந்தனையிலிருந்து சாதி உயர்வு தாழ்வு பார்த்து இனவாதம் செய்யும் நபர்களும் இதனை யோசிப்பார்களாக!
https://www.euronews.com/2020/06/08/bristol-statue-toppling-who-was-edward-colston-and-why-did-anti-racism-protesters-target-h?fbclid=IwAR2yEWUq22-HEhEPKFTt_wl60Z8ZB_6sW0GG_mcC4S8r4S0CfN_sbqon8YQ
-சுபா

No comments:
Post a Comment