நேற்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரிட்டனின் பிரதமர் தோல்வியடையவில்லை. ஆயினும் இன்று மேலும் ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளதாகச் செய்திகள் வருகின்றன. இத்தகைய நிகழ்வுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டனுக்கு எதிரான அதிருப்தியை மேலோங்கச் செய்திருக்கின்றன.
டோய்ச்சவெல்ல பத்திரிக்கை பிரிட்டனில் #BREXITதொடர்பாக நிகழ்கின்றவற்றை வேதனையோடு காண்கின்றது. BREXIT அமலாக்கத்திற்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. இந்த நிலையில் உள்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அரசு தற்சமயம் ஈடுபடுவது சரியன்று... என இப்பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
நேற்று, இனி, அதாவது 2020ம் ஆண்டு தேர்வில் தலைமை பொறுப்பிற்கு தாம் போட்டியிட மாட்டேன் என உறுதி வழங்கியதால் தான் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவு தெரேசா மேக்கு கிட்டியது என அனைத்து செய்தி ஊடகங்களும் தெரிவித்தன.
BREXIT அறிக்கை எண்-50 முற்றிலுமாக தவிர்க்கப்படவேண்டும் என ஆளும் அரசின் அனைத்து எம்பிக்களும் சம்மதித்தால் அது நிலமையைச் சரிகட்ட ஓரளவு உதவலாம். ஆனால் நீங்களோ தலைமையை மாற்றுவதில் இந்த சமயத்தில் கவனத்தை செலுத்துகின்றீர்களே.. என இப்பத்திரிக்கை கேள்வி எழுப்புகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகத்திற்கு (பிரஸ்ஸல்ஸ்-பெல்ஜியம்) இப்போது பிரதமர் தெரேசா மே சென்றிருக்கின்றார்.
BREXIT அறிவிப்பு நெருங்கிக் கொண்டிருக்கின்றது. பிரிட்டன் பொருளாதார பாதிப்பை நிச்சயம் சந்திக்கும் என்பதற்கு அறிகுறியாக Rolls Royce நேற்று தனது large aircraft engines தயாரிப்பு பணியை பிரிட்டனிலிருந்து ஜெர்மனிக்கு மாற்றுவதாக அறிவித்தது. இதுபோல இன்னும் சில வர்த்தக நிறுவனங்கள் தங்கள் அனுகூலம் கருதி பிரிட்டனிலிருந்து வர்த்தக உற்பத்தி நிலையங்களை வேறு நாடுகளுக்கு மாற்றலாம். எதுவாகினும் பாதிப்பு பிரிட்டனுக்கே!
-சுபா
No comments:
Post a Comment