Monday, June 29, 2015

ஜெர்மனியில் சில சுவாரசியமான நிகழ்வுகள் - Pappochelys



240 மில்லின் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாகக் கருதப்படும் ஆமை குடும்பத்தின் தாத்தா வெர்ஷன் ஒன்றின் எச்சங்கள் ஜெர்மனியின் நூரன்பெர்க் நகரில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.  இது இன்று நாம் அறிந்த ஆமை இனத்தை விட மாறுபாடான உடலமைப்பைக்கொண்டதாக இருப்பினும் இது ஆமை வகையிலேயே அடங்குகின்றது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பாம்பு வகை என்பதை விட இவை பறவை இனத்தோடு நெருங்கிய வகையில் இருப்பதாகவே ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

இந்த புதிய ஸ்பீஷீசிற்கு பப்பாசெலீஸ் Pappochelys என்ற கிரேக்க பெயரை சூட்டியிருக்கின்றனர். இதற்கு கிரேக்க மொழியில் தாத்தா அல்லது ஆமை என்று பொருள் படும். இந்த விலங்கு நீர் நிறைந்த நிலத்தோடு இணைந்த பகுதியில் வாழ்ந்திருக்கும் என்று இந்த ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இந்த விலங்கு ஏற்கனவே சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட 220 மில்லியன் ஆண்டுகள் பழமையான ஒரு விலங்கையும், தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட 260மில்லியன் ஆண்டுகள் பழமையான விலங்கையும் ஒத்திருக்கின்றதாம். 

இந்க் கண்டுபிடிப்பும் இதன் வழி அறிய வரும் தகவல்களும் பறவைகளும், முதலைகளும், டைனோர்சுகளும் ஆமை இணத்தோடு உடல் கூறு வகையில் நெருங்கிய தொடர்பு கொண்டவை என்பதை உறுதி செய்கின்றன என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். 

ஸ்டுட்கார்ட் நேச்சுரல் ஹிஸ்ட்ரி அருங்காட்சியகத்தில். விரைவில் ஒரு நாள்  சென்று இவரை பார்த்து வர வேண்டும். :-))


சுபா

No comments:

Post a Comment