ஜியோர்ஜ் க்ளூனியின் புதிய படங்களில் ஒன்று மோனுமெண்ட் மேன்.
ஜெர்மனியில் நாஸி ஆட்சியின் போதும் 2ம் உலகப்போரின் போதும் அழிவுக்கு உள்ளாகும் நிலையிலிருந்த கலை வேலைப்படுகளைச் சேகரித்து, பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு குழுவின் உண்மை கதையை மையமாக வைத்து தயாரிக்கப்படும் படம் இது. ஒருவருக்கும் மேற்பட்ட, குழுவாக இயங்கிய இக்குழுவில் இருந்தோரில், நாஸி கட்சி அரசியல்வாதிகளுடனேயே தொடர்பில் இருந்தவர்களும் உண்டு
முதலில் மோனுமெண்ட் மேன், இவர்களது பணி பற்றிய இந்த செய்தி ரோபர்ட் எட்சலின் Monuments Men Allied Heroes, Nazi Thieves and the Greatest Treasure Hunt in History என்ற நூலில் பதிவாகி இருக்கின்றது. இப்போது க்ளூனி நடிக்க இக்கதை படமாக தயாராகிக்கொண்டிருக்கின்றது. யுத்த சமயத்தில் எல்லோருக்குமே மனம் தங்கள் உயிரை பாதுகாக்க வேண்டுமே என்பதிலே இருப்பது தான் இயற்கை. ஆனால் இம்மனிதர்களோ அழிவின் இடையிலே கலைப்பொருட்களைப் பாதுகாக்க, சிற்பங்களைப் பாதுகாக்க முடிவெடுத்து இயங்கியது என்பது தான் இவர்களின் தனிச்சிறப்பு. விசித்திரமான, கலைப்படைப்புக்களின் மேல் தீரா காதல் கொண்ட இவர்கள் கலியின் காவல்ர்கள் என்றால் மிகையாகாது தானே!
மோனுமெண்ட் மேன் குழுவினரின் நடவடிக்கைகள் சாதாரண நிலையில் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றே. இவர்கள் 2ம் உலகப்போரின் போது சேகரித்து பாதுகாத்து வைத்த கலைப்பொருட்கள் இன்று நாட்டின் பொக்கிஷங்களில் வரிசையில் இடம்பிடிக்கின்றன.
இவ்வகை வரலாற்றுச் செய்திகள் திரைப்படமாக மக்கள் மத்தியில் உலவ வருவது வரவேற்கத் தக்க ஒன்று. ஜெர்மனியிலேயே இப்படம் முழுமையாக படமாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. இப்படம் விரைவில் வருகின்ற பெப்ரவரி மாதத்தில் பெர்லின் திரைப்பட விழாவின் போது வெளியீடு காண உள்ளதாகத் தெரிகின்றது.
முழுமையான செய்திக்கு http://www.dw.de/monuments-men-tracking-looted-treasures/a-17218246
No comments:
Post a Comment