Saturday, July 13, 2013

வைஹிங்கன் அன் டெர் என்ஸில்..

வார நாட்கள் சில நேரங்களில் நமது திட்டமிடுதலுக்கு ஒத்துழைக்க மறுத்து விடும் நிலமைகள் பல வேளைகளில் அலுவலகங்களில் பணி புரிகின்ற பலருக்கு நிகழ்ந்து விடுகின்றது. தினம் உடற்பயிற்சி செய்வதற்கு நேரம் ஒதுக்கி வைத்திருந்தாலும் அலுவலகப் பணிகள் மிக அதிக அளவில் நமது நேரத்தை திருடிக் கொள்ளும் போது ஏனைய விஷயங்களுக்காக ஒதுக்கி வைத்திருக்கின்ற நேரத்தைப்பலிகொடுக்க வேண்டிய கட்டாயம் வாய்த்து விடுவது பலருக்கும் அனுபவமாக இருக்கும்.

அலுவலக சிந்தனைகளைத் தொலைத்து விட்டு  நம்முடைய இயல்பான நிலைக்கு வருவதற்கு பலர் சிரமப்படுவதுண்டு. வீட்டுக்கு வந்த பின்னரும் அலுவலகச் சிந்தனைகளே மனதை ஆக்ரமித்திருக்கும் நிலை. பனியே தானாகி  தன் இயல்பை மறந்து  பல வேளைகளில் நாம் நாமாக இல்லாத நிலைகளை உணர்கின்றோம். வார நாட்கள் தருகின்ற மன அழுத்ததை மாற்ற வார இறுதி நாட்களில் இயற்கையில் ஒன்றிப்போவது மனதிற்கும் உடலுக்கும் ஓய்வு தரும் ஒரு மருந்து அல்லவா?

இங்கு கோடை காலங்களில் நாங்கள் வார இறுதியில் நீண்ட நடைப்பயணங்களை மேற்கொள்வதுண்டு. என் நண்பர்கள் ரோபர், நிக்கோலா, வெர்னர், பீட்டர்   இணைந்து கொண்டதால் ஐவராக ஒரு நடைப்பயணம் செய்ய திட்டமிட்டோம். நடைப்பயணம் என்றாலே ஏற்பாடுகள், இடம் தேர்ந்தெடுத்தால் எல்லாம் எனது பணியாகிவிடும். என் தேர்வுகளும் எப்போதும் எல்லோருக்கும் பிடித்ததாக அமைந்து விடும்.


இம்முறை 18 கிமீதூரம் உள்ள ஒரு நடைபயணத்தை அதிலும் ஸ்டுட்கார்ட் நகருக்கு அருகிலேயே இருக்கும் ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்தேன். வயல் பகுதியில் ஆரம்பித்து என்ஸ் நதிக்கரையோரமாக நடந்து சென்று பின்னர் திராட்சை தோட்டம் உள்ள மலைப்பகுதியில் ஏறிச் சென்று பின்னர் பள்ளத்தாக்கு பகுதிக்கு வந்து சில கி.மீ தூரம் காட்டுப் பகுதியில் நடந்து பின்னர் மீண்டும் வயல் பகுதிக்கு வந்து பயணம் முடிவடையும். காலை 10 மணிக்குத் தொடங்கி 3 மணி அளவில் முடிக்கலாம் என்பதாகத் திட்டம். ஆனால்  இடையில் மதிய உணவுக்காகவும் ஓய்வெடுத்ததால் 5 மணிக்குத்தான் முடிக்க முடிந்தது.

எங்கும் பசுமை. வளர்ந்து அருவடைக்குத் தயாராக இருக்கும் கோதுமை, கடுகுப் பயிர், வரிசை வரிசையாக நிற்கும் திராட்ச்சை மரங்கள், மரம் முழுக்க பழங்களைத் தாங்கி நிற்கும் செர்ரி மரங்கள், ஆப்பிள் பேர் பழ மரங்கள், கிராமத்தில் விவசாயிகளில் தோட்டத்தில் காய்த்திருக்கும் ஸ்ட்ராபெர்ரி பழங்கள், வீட்டு வளர்ப்புப் பிராணிகள், மலைப்பாறைகளின் அழகு அனைத்துமே உள்ளத்தைக் கொள்ளை கொண்டன.

ஸ்டுட்கார்ட் அருகிலேயே இருக்கும் இப்பகுதிக்கு ஸ்டுட்கார்ட் வாசிகளான எங்கள் ஐவரில் இதுவரை  யாருமே சென்றிருக்கவில்லை. இப்படி ஒரு அழகான பகுதி இங்கே இருக்கின்றதா என மலைத்துப் போய் திரும்பினோம்.









































குறிப்பு: இது இரண்டு வாரங்களுக்கு முன் சென்ற நடைப்பயணம்.

சுபா




4 comments:

  1. வயல்களும் மலர்களும் செடிகொடிகளும் நீரோடைகளும் கொள்ளை அழகு. வாழ்க!
    பதிவு நம்ம ஊரைப் பற்றியும் நம் மனப்பான்மையைப் பற்றியும் எண்ணிப்பார்க்க வைத்தது.

    ஸ்ரீமுஷ்ணத்திலிருந்து திருகூடலையாற்றூர் ஒரு மாதம் முன்னர் ஆட்டோவில் சென்றோம். வயல்வெளிகளின் அழகு சொற்களில் விவரிக்கமுடியாதது.பம்ப்செட் மூலம் தண்ணீர்கொட்டி செயற்கை ஓடை சலசலக்கிறது.
    இங்கு வெயில்,மானிட சமுத்திரம். மேலும் இதுபோன்ற நடைப்பயணம் பலர் எண்ணியும் பாராதது.

    பதிவை அடர் கருப்பு பின்புலத்தில் மஞ்சள்போல் தோற்றமளிக்கும் எழுத்துக்களில் படிப்பது சிரமமாக இருக்கிறது. மாற்ற இயலுமா?
    அன்புடன்
    சொ.வினைதீர்த்தான்.

    ReplyDelete
  2. வித விதமான பச்சை நிறங்கள். அருமையான படங்கள். இப்படி எல்லாம் நடைப்பயணம் செய்ததே இல்லை. இங்கே தை மாசம், பின்னர் வைகாசி மாசம் பிரார்த்தனை செய்து கொண்டு பக்தர்கள் பழநிக்குப் பாத யாத்திரை போவதுண்டு. அதில் கூடக் கலந்து கொண்டது இல்லை. :))))

    ReplyDelete
  3. I envy you! When in India we do not have sidewalks safe enough for walking.Climate is another dampener of our spirit. Enjoy your good fortune!

    ReplyDelete