ஏறக்குறைய ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் ஜெர்மனியில் முந்தைய ஜெர்மன் அதிபர் கிறிஸ்டியான் உல்வின் பெயர் செய்தித் தாட்களிலும் தொலைக்காட்சிகளிலும் இடம்பெறுகின்றது. அவரும் அவரது துணைவியாரும் அதிகாரப்பூர்வமாகப் பிரியும் செய்தியை சில நாட்களுக்கு முன்னர் இருவரும் வெளியிட்டதிலிருந்து இப்போது இது பரவலாகப் பேசப்படும் செய்தியாக அமைந்திருக்கின்றது. ஜெர்மனியின் க்லேமரஸ் பார்ட்னர் என சில வருடங்கள் இவர்களை மீடியாக்கள் வர்ணித்தன. பெட்டினா உல்வ் Jenseits des Protokolls என்ற ஒரு நூலையும் எழுதி வெளியிட்டிருந்தார்.
இன்னொரு உள்ளூர் விஷயம்..
இவ்வருடம் நடைபெறவிருக்கும் தேர்தலில் ஆளும் கட்சியின் அங்கேலா மெர்க்கலை எதிர்த்துப் போட்டியிட தயாராகிக் கொண்டிருக்கும் SPD கட்சியின் ஸ்டையின்ப்ரூக் பற்றியது.
அரசியல் ஆய்வாளர்கள் தங்கள் வேலையைத் தொடங்கி விட்டனர். இவரை பேச வைத்து இவரது குறை நிறைகளை அவர் பேச்சிலிருந்து பிடுங்கி எடுத்து அதனை ஆராய்வது இவர்களுக்கு நல்ல வேலையாக இப்போது அமைந்துள்ளது. மனதில் படுவதை வெளிப்படையாகச் சொல்லும் அடிப்படை குணம் உள்ளவர். ஆக இவர் ஒரு அரசியல் கட்சிக்கு தகுதியானவர் அல்ல என சிலர் அபிராயம் தெரிவித்திருக்கின்றனர். திறமைசாலி.. குறிப்பாக பொருளாத மேம்பாடு எனும் போது இவர் திறமை அளப்பறியது. ஆக இவர் தகுதியானர் என சிலர் அபிப்ராயம் சொல்கின்றனர். உள்ளூரில், வரும் நாட்களில் மிக அதிகமாப் பேசப்படும் ஒரு ஜெர்மானிய ஆண் என்றால் இவராகத் தான் இருக்கும்.
சுபா
No comments:
Post a Comment